சூர்யாவை பார்த்து வழுஞ்சுருக்கேன், கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்- வீடியோ

  • 6 years ago
அவரை பார்த்து வழிந்திருக்கிறேன் என்று தானா சேர்ந்த கூட்டம் பிரஸ் மீட்டில் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடந்த தானா சேர்ந்த கூட்டம் பிரஸ் மீட்டில் பேசிய கீர்த்தி கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி. அன்பான இயக்குனர் பற்றி கூற வேண்டும். இயக்குனர் ஒரு அன்பான பிரதர். இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி பிரதர். இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் அழகானது. தினேஷ் ப்ரோவுக்கு நன்றி. 80கள் காலத்தை ரொம்ப அழகாக காட்டியிருப்பார் அவர். சஞ்சய் ராமசாமியை பார்த்து நான் வழிஞ்சிருக்கிறேன். இன்று அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன். இது எனக்கு கிடைத்த பாக்கியம். சூர்யா சாருடன் சேர்ந்து நடித்தது எனக்கு பெரிய விஷயம் என்றார் கீர்த்தி.

Keerthi Suresh in the audio launch of thaana sendha kootam has said that she used to be a huge fan of surya's since his Gajini days.. and to be able to act alongside him today is a dream come true. She has thanked the cast and crew for the amazing time she had shooting in the 80s setup.

Recommended