Skip to playerSkip to main content
  • 8 years ago
"என் திருமணம் நடக்கும்போது நடக்கும். ஆனால் நான் கண்டிப்பாக ஒரு தெலுங்கு பையனைத் தான் திருமணம் செய்வேன்," என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார் ரகுல்ப்ரீத் சிங். டெல்லியைச் சேர்ந்த ரகுல்ப்ரீத் சிங் மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர். கன்னடத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்தவருக்கு தமிழ் அவ்வளவாக கை கொடுக்கவில்லை. தடையற தாக்க படம் பேசப்பட்டாலும் ரகுல் கண்டுக்கொள்ளப்படவில்லை. என்னமோ ஏதோ, புத்தகம் படங்கள் படுதோல்வி அடைந்தன.
தமிழ் ஃபீல்டையே வெறுத்துப்போய் தெலுங்கு பக்கம் போன ரகுல் அங்கே நம்பர் ஒன் ஹீரோயின் ஆனார். பின்னர் தமிழ் சினிமா அவரைத் தேடிப் போனது. தெலுங்கு மார்க்கெட்டை குறி வைக்கும் தமிழ் ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ரகுலைத்தான் பிடிக்கிறார்கள். தமிழில் நடந்த சில கசப்பான சம்பவங்களோ என்னவோ ரகுலுக்கு தமிழ் சினிமாவை பிடிக்காமலேயே போய் விட்டது. இப்போது திருமணம் பற்றிய கேள்விக்கு ஆந்திர பையனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். ஒரு அழகான பொண்ணை இப்படி நோக வெச்சுட்டீங்களே தமிழ் பாய்ஸ்?

Rakul Preeth Sing has clearly said that she would marry a telugu boy only.

Category

People
Be the first to comment
Add your comment

Recommended