அரசியல் வாரிசு நடிக்க அவார்டு இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோயினாக இடம் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்கிறாராம் பப்ளி நடிகை.
அரசியல் வாரிசு நடிகர் ஹீரோவாக அறிமுகமானபோது பப்ளி நடிகை ஒல்லி நடிகருக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக இருந்தார். இருந்தாலும் அரசியல் வாரிசுடன் ஜோடியாக நடித்தார். இப்போது அரசியல் வாரிசு ஹீரோவாக ஃபார்ம் ஆகி விட்டார். ஆனால் நடிகைக்கு வாய்ப்பில்லை.
அடுத்து அரசியல் வாரிசும் அவார்டு இயக்குநரும் சேர்ந்து படம் பண்ணப்போவதாக தகவல் வந்தவுடன் அந்த படத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறாராம். அப்படி ஒன்று நடந்தால் மூன்றாவது முறையாக இருவரும் ஜோடி சேர்வார்கள்.
இதேபோல் தான் டிவி நடிகர் நடிக்க வந்தபோது இமேஜ் பார்க்காமல் அவருடன் சேர்ந்து நடித்தார் நடிகை. ஆனால் நடிகர் அதன் பின்னர் நடிகையை கண்டுகொள்வதில்லை.
That Bubbli actress is trying hard to get chance in political family hero's next film.