Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/11/2017
ஆர்கே நகரில் தான் எந்தக் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், தன் அனுமதியில்லாமல் இதுபோன்ற செய்திகள் வெளியிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நடிகர் கவுண்டமணி கூறியுள்ளார்.
"இன்று (11.12.17) ஒரு காலை நாளிதழில் ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. அந்த செய்தி உண்மையல்ல. நான் எந்த கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். நான் எந்த கட்சியையும் ஆதரித்தும் பிரசாரம் செய்யவில்லை. என்னைக் கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Actor Goundamani has denied reports on his campaign for any party or candidate in RK Nagar.

Category

🗞
News

Recommended