Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/9/2017
இயக்குநர் அட்லீ, 'மெர்சல்' படத்தின் அசத்தலான வெற்றிக்குப் பிறகு தனது மனைவியோடு ஜாலியாக உலகம் சுற்றி வருகிறார். மெர்சல் திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்து அசத்தினார் விஜய். அதைத் தொடர்ந்து சமீபத்தில், நடிகர் விஜய், ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோரோடு துபாய்க்கு சென்று வந்தார் அட்லீ.
விஜய், அட்லீ, ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய்க்கு சென்றது மெர்சல் வெற்றியைக் கொண்டாடுவதற்காகத்தான் எனக் கூறப்பட்டது. ஆனால், மூவர் மட்டும் சென்றிருப்பதால் அடுத்த படத்திற்கான டிஸ்கஷனாக இருக்கலாம் எனவும் சந்தேகத்தைக் கிளப்பியது.

இந்நிலையில், தற்போது, இயக்குநர் அட்லீ அவரது மனைவி பிரியாவுடன் பாரீஸ் நகரத்துக்கு டூர் போயிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ரியா அட்லீ.
பாரீஸ் நகரத்தில் இருக்கும் டிஸ்னி லேண்டில் எடுத்த புகைப்படத்தை பிரியா அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அட்லீ பிரியாவுக்கு முத்தமிட்டுள்ளார். | விமல் நடித்த 'எத்தன்' படத்தை இயக்கியவர் சுரேஷ். தற்போது இவர் பாம்பை அடிப்படையாகக் கொண்டு ஃபேன்டசி த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ஜெய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கேத்தரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 'நீயா' என்ற படம் பாம்பை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Director Atlee has been travelling the world with his wife after the victory of 'Mersal'. Priya Atlee has posted her photo with atlee on Disneyland in Paris. In this photo, Atlee kisses Priya

Actor Jai Currently plays a Fantasy Thriller based on a snake directed by 'Eththan' Suresh. The film stars Jai as hero with three heroines like Catherine Teresa, Varalakshmi and Raai Lakshmi. The shooting of the film begins next month.

Recommended