Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/7/2017
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற 'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் இசையமைப்பாளர் சிம்பு கலந்து கொண்டார். விடிவி கணேஷ் தயாரிப்பில், சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சேதுராமன் இயக்குகிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்துகொண்டு பேசினார். தனுஷ் மேடையில் இருக்கும்போது, சிம்பு அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
சிம்பு, இறைவனுக்கு நன்றி எனச் சொல்லி பேசத் தொடங்கினார் சிம்பு. "சந்தானத்தை நான் சினிமாவில் அறிமுகப்படுத்தவில்லை. அவர் திறமையானவர். அவரோட திறமைக்கு என் மூலமா அங்கீகாரம் கிடைச்சிருக்கு. நான் தான் அவரை அறிமுகப்படுத்துனேனு இனியும் சொல்லவேணாம்.
இளையராஜா சார் மியூசிக் கேட்டு வளர்ந்தவன் நான். மைக்கேல் ஜாக்சன் எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கார். என் அப்பா எனக்கு சின்ன வயசுல இருந்து கூடவே இருந்து மியூசிக் சொல்லிக் கொடுத்திருக்கார். ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு இசையில் ஹெல்ப் பண்ணி இருக்கார். எனக்கு அண்ணனா, அம்மாவா, குருவா இருந்தவர் யுவன் ஷங்கர் ராஜா.
நான் இன்னிக்கு ஒரு மியூசிக் டைரக்டரா இருக்கேன்னா அதுக்கு முதல் காரணம் யுவன் ஷங்கர் ராஜா. நிறைய பேரோட மியூசிக்ல பாடல்கள் பாடியிருக்கேன். எனக்கு சான்ஸ் கொடுத்த அத்தனை இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. அனிருத், பிரேம்ஜி வரைக்கும் எல்லோர்கிட்டயும் நான் கத்துக்கிட்டு இருக்கேன்.

Recommended