Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/5/2017
தயாிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது விஷால் அணியின் சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்க செயலாளராக உள்ள அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்களுக்கான வினியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஞானவேல்ராஜா. இந்நிலையில் தான் அவர் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக ராஜினாமா செய்வதாக அவர் அளித்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை பதவி விலகக் கோரி இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் போராடி வரும் நிலையில் ஞானவேல்ராஜா ராஜினாமா செய்துள்ளார்.


Gnanavel Raja has resigned as the secretary of Tamil Film Producers Council on tuesday. He has cited personal reasons for this sudden move.

Category

🗞
News

Recommended