கணவனுக்குத் தெரியாமல் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி சொகுசு வாழ்க்கை வாழும் ஒருவனின் கதையை திருட்டுப் பயலேவில் சொன்ன சுசி கணேசன், அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார், அதே தலைப்பில். ஆனால் அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் துளியும் தொடர்பில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறை பாதிப்புகள்தான் இந்தக் கதைக்கு அடித்தளம். நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்பது அவருக்கு இடப்பட்ட உத்தரவு. நேர்மை வேலைக்காகாது எனப் புரிந்து மெல்ல மெல்ல காசு பார்க்க ஆரம்பிக்கிறார். ஒரு நாள் அமைச்சரான எம்.எஸ்.பாஸ்கரின் போன்காலை ஒட்டுக் கேட்கும் பாபி, பாஸ்கரின் பணத்தை அபேஸ் செய்கிறார். இந்த வேலையைத் தொடர ஆரம்பிக்கிறார். பாபியின் காதல் மனைவி அமலா பால் ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர். அமலா பால் பிறந்தநாளுக்கு தனது நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். அந்த நண்பர்களின் போன் கால்கள் மற்றும் அமலாபாலின் போன் நம்பரையும் ஒட்டுக் கேட்கிறார் பாபிசிம்ஹா. இதில் திருமணமான பெண்களிடம் மோசமாக பேசி வலைவிரிக்கும் பிரசன்னாவை நோட்டம் விடுகிறார்.
Susi Ganesan's Amala Paul starrer Thiruttupayale 2 is watchable for its content.