நடிகை அமலாபால் ஷூட்டிங் இல்லாத நாட்களைக் கொண்டாட இமயமலைப் பக்கம் சென்றுள்ளார். லடாக் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அமலாபால் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ஒரு பக்கம் சொகுசு கார் வாங்கி அதைப் போலி முகவரி கொடுத்துப் பதிவு செய்த சர்ச்சை சுழன்று அடித்துக்கொண்டு இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படமால் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை அமலாபால். சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் சுற்றுலாத் தளங்கள், ஏரியில் படகு சவாரி என ஜாலியாக சுற்றினார் அமலாபால். இப்போது லடாக்கிற்கு வந்து சுற்றிப்பார்த்த அமலாபால், 'எனது கனவு உலகிற்கே வந்துவிட்டேன் என நினைக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' என அடுத்தடுத்து இரு வெற்றிப் படங்களைத் தந்த சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. இதுவும் பக்கா காமெடிதான்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக, முதல் முறையாக சமந்தா நடிக்கிறார். சிவகார்த்திகேயனுடன் சமந்தா மட்டுமல்ல, இன்னும் இரு முக்கிய சீனியர் நடிகர்களும் முதல்முறையாக நடிக்கிறார்கள். அவர்கள் சிம்ரன் மற்றும் நெப்போலியன்.
Actress Amala Paul has gone to the Himalayas to celebrate shoot free days. Amala paul looked around the areas including Ladakh and uploaded the photos on her Instagram page. Simran turns baddie against Sivakarthikeyan in his Ponram directed next.