கலா மாஸ்டருடன் மோதி அசிங்கப்பட்ட ஜூலி: வைரல் வீடியோ

  • 7 years ago
ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜூலி அசிங்கப்பட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆசையாக உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து கலா மாஸ்டர் பரிந்துரையின்பேரில் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் ஜூலி அசிங்கப்பட்டுள்ளார்.ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ராதை மனதில் பாடலுக்கு அழகாக நடனம் ஆடினார். இதை பார்த்த ஜூலியும் அவருடன் சேர்ந்து ஆட பார்வையாளர்கள் கை கொட்டி சிரித்தனர்.

பார்வையாளர்கள் சிரிப்பதை பார்த்த ஜூலி நைசாக நடனத்தை நிறுத்திவிட்டு ஓரமாக போய் நின்று கொண்டார். கலா மாஸ்டர் அழகாக ஆடி முடித்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவுடன் மோதி ஜூலி அசிங்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் ஓவியா ஆர்மி அவரை அசிங்கப்படுத்தி வருகிறது.

Juliana is trolled when she tried to dance along with Kala master in Odi Vilaiyadu Pappa programme.

Recommended