நாக சைதன்யா-சமந்தா திருமண வரவேற்பு- வீடியோ

  • 7 years ago
சமந்தா, நாக சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஹைதராபாத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சைதன்யா, சமந்தாவை வாழ்த்தினார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ராம் சரண் தேஜா, அல்லு அர்ஜுன், நானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் மருமகளுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Naga Chaitanya and Samantha hosted a reception in Hyderabad on November 12. The reception was attended by many big names of the industry and it was indeed a star-studded affair.

Recommended