Skip to main content
  • 3 years ago
1359 அண்டங்களிலும் அருளாட்சி புரிகின்ற வழிபடுநிலையினர் #பசுபதி தாத்தா மாமதுரைப் பாண்டி முனீசுவரர் வரலாற்றுச் சுருக்கம்
“நான்கு யுகங்களாக அருளாட்சி நிகழ்த்தி வரும் #அருளரசர்; நான்கு யுகங்களுக்கும் முந்திய #அனாதி காலத்தில் வேறு #அண்டங்கள், #பேரண்டங்கள், #அண்டபேரண்டங்கள் முதலியவைகளிலிருந்து இம்மண்ணுலகுக்கு வந்திட்ட கடவுள்கள், வழிபடுநிலையினர்கள் எனும் இருவகையினரில் வழிபடு நிலையினர் எனும் வகையைச் சேர்ந்தவரே இந்தத் தாத்தா மதுரைப் பாண்டி முனீசுவரர், ...” என்றிப்படிப் பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் #குருபாரம்பரியம், #இலக்கிய பாரம்பரியம், #அரச பாரம்பரியம் எனும் நூல்கள் குறிக்கின்றன.
#முனீசுவரர்கள், #அரையர்கள் எனப்படும் #அரசர்கள், #முத்தையாக்கள், #காரணமூர்த்திகள், #கருப்புகள், #ஐயனார்கள், #நாவலடியார்கள், #அரசரடியார்கள், #மூங்கிலடியார்கள்... என்று பதினெட்டு வகையினர் இம்மண்ணுலகுக்கு வந்திட்ட பதினெண் வழிபடு நிலையினர்கள் என்று குறிக்கப் படுகின்றனர்.
இந்தப் பதினெண் வழிபடு நிலையினர்க்கும் தனித்தனியாகக் ‘காயந்திரி மந்தரம்’, ‘காயந்திரி மந்திரம்’, ‘காயந்திரி மந்திறம்’, ‘காயந்திரி மாந்தரம்’ ‘காயந்திரி மாந்தரீகம்’ என்பவை இருக்கின்றன.
தாத்தா மதுரைப் பாண்டி முனீசுவரர் அருளை முறையாகப் பெற்று பத்தி, சத்தி, சித்தி, முத்திகளைப் பெற விரும்புகிறவர்கள் இங்கு வெளியிடப் படும் ‘காயந்திரிகளை’ அன்றாடம் ஒருவேளையாவது குறைந்தது (48) நாற்பத்தெட்டு முறை முதல் (108) நூற்றெட்டு முறை ஓத வேண்டும்.
இந்த ஐந்தில் ஏதேனும் ஒரு காயந்திரியை ஓதினாலும் போதும்.அருளை நிறைவாகப் பெறலாம்.
ஓம் தாத்தா மதுரை பாண்டி முனீசுவரரே போற்றி!

!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!
=============
"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
=============

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
arulaatchithiruchabai@gmail.com
+91 9845050085, +91 9600193366

Category

People
Be the first to comment
Add your comment

Recommended