மட்டக்களப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டது. அந்த நிகழ்வில் காவல்துறையினர் உட்புகுந்து நிகழ்வை நடத்தவிடாது குழப்பம் செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் காவல்துறை அதிகாரியிடம் உணவு வழக்கும் நிழக்வைக் குழப்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். இந்த நிழக்வு குறித்து உங்களுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலைக் கூறுங்கள் என்றும் அவர் தொடர்ச்சியாக காவல்துறையினரிடம் கேள்விகளை எழுப்பினார். காவல்துறையோ எதுவித பதிலையும் கூறாது ஆவணங்களையும் காட்டாது செய்வது அறியாது நின்றனர்.
Be the first to comment