சென்னை: இலவச கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தையல், ஆரி ஒர்க், சானிட்டரின் நாப்கின் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக முடித்த 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக காவல் ஆய்வாளர் வனிதா, உதவி ஆய்வாளர் சுஜாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களும் உபகரணப் பொருட்களும் வழங்கினர். நிகழ்ச்சி முடிவில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வயது வரம்பின்றி சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெண்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Comments