ரிதன்யா வரதட்சணை கொடுமை செய்யப்படவில்லை என்று ஆர்.டி.ஓ. அறிக்கையும், உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை என்று மருத்துவ அறிக்கையும் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் திருப்பூர் ரிதன்யாவே கடைசியாக தனக்கு நேர்ந்ததாக கூறிய விஷயங்கள் ஏன் ஏற்கப்படவில்லை என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.