Please Visit and Subscribe to our YouTube Channel through the link below https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w
திரைப் படம்: பொற்சிலை (1969) பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன் இசை: R. கோவர்தனம் பாடல் வரிகள்: கண்ணதாசன் இயக்கம்: A V பிரான்சிஸ் நடிப்பு: ஜெமினி, ராஜ்யஸ்ரீ
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா பசியென்று வந்தவர்க்கு புசியென்று தந்தவரை பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்று பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும் ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்து கொண்டே இருந்தால் வெற்றியை காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா
நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் நம்பிக்கை தருவானடா இறைவன் நம்பிக்கை தருவானடா