Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/22/2021
#cithiraitv #நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை - திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது எதிர்த்து திமுக மேல்முறையீடு செய்யாதது அவர்களது ஓரவஞ்சனை காட்டுகிறது..... திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா புதுக்கோட்டையில் பேட்டி

புதுக்கோட்டையில் அதிமுக உட்கட்சித் தேர்தல் நேற்று தொடங்கியுள்ளது தேர்தல் பொறுப்பாளராக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் 2 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உட்கட்சித் தேர்தல் காண விண்ணப்ப படிவத்தை அவர்கள் வழங்கினார்கள். இதில் பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா. அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு தற்போது அதை திமுக திறந்து வைக்கிறது. கடந்த தேர்தலில் 2 சதவீத வாக்கு வித்தியாசத்தில் திமுக ஆட்சி பொறுப்பில் உள்ளது
மக்கள் மனதில் தற்போது மாற்றம் வந்துள்ளது அடுத்த தேர்தலில் நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம். திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் இதுவரை வழங்கவில்லை
நகராட்சி தேர்தலை மனதில் வைத்து ஊராட்சிக்கு தற்போதுதான் ஒரு சிறிய நிதியை ஒதுக்கி உள்ளனர். இந்த உட்கட்சித் தேர்தல் தான் திமுக அரசை நிறுத்துவதற்கான முதல் அடித்தளம் என்று பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா.
அதிமுக அனைத்து தேர்தலுக்கும் தயாராக உள்ளது. கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. உணவுக் கலப்படம் அதிகரித்துள்ளது. இதனால் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்
இந்த சூழ்நிலையில்தான் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது பெரும்பாலான இடங்களில் அதிக இடங்களில் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறும்., வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கி அதை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு திமுக செய்யாததற்கு காரணம் அவர்களின் ஓரவஞ்சனை., அம்மா பெயரில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போது முடக்கி வருகிறார்கள். எந்த அரசாங்கமாக இருந்தாலும் மேல்முறையீடு செய்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது திமுக மேல்முறையீடு செய்ய தயாராகி வருகிறது.

பேட்டி : ராஜன் செல்லப்பா - எம்.எல்.ஏ திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி

Category

🗞
News

Recommended