சகோதரிகளின் படிப்பிற்காக! டீ விற்கும் 14 வயது சிறுவன்! #inspiration

  • 4 years ago
தனது சகோதரிகள் எந்த இடையூறும் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக 14 வயது சிறுவன் டீ விற்பனை செய்து வருவது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். அதில் டெல்லியை சேர்ந்த சுபானும் ஒருவர். 14 வயதான சுபான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். அவரது தந்தை 12 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டார். இதனால் தாயின் வருமானத்தை நம்பியே குடும்பத்தினர் இருந்துள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பால் வேலையை இழந்த அவர், குடும்பத்தை சமாளிக்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

Recommended