Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/7/2017
ஹரியானாவில் 5 வயது சிறுமியை 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தி கொலை செய்து இருக்கிறான். மேலும் சினிமாவை பார்த்து தான் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம அளித்து இருக்கின்றான். காணாமல் போன அந்த 5 வயது சிறுமியை அதே தெருவில் இருக்கும் சிறுவனே கொலை செய்து இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவன் போலீஸ் வாக்குமூலத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடிய விஷயங்கள் பலவற்றை சொல்லி இருக்கிறான். அதேபோல் அவன் தனது வாக்குமூலத்தில் ஏன் அந்த அந்த சிறுமியை கொலை செய்தேன் என்பதற்கும் காரணம் கூறியிருக்கிறான்.

ஹரியானாவின் சண்டிகரில் உள்ள 5 வயது சிறுமி ஒருவர் நேற்று கடத்தப்பட்டார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுவன் ஒருவன் கடத்தி இருக்கின்றான். பக்கத்து வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த போது அந்த சிறுவன் சிறுமியிடம் போய் விளையாட்டாக பேசி டிவி பார்க்க அழைத்து இருக்கிறான். ஆனால் வீட்டிற்குள் வந்த பின் கதவை மூடிவிட்டு, அந்த சிறுமியை கட்டிப் போட்டு இருக்கிறான்.

அதன் பின் அந்த குழந்தையை கடத்தி சரியாக 2 மணி நேரம் கழித்து அந்த சிறுமியின் வீட்டிற்கு போன் செய்து இருக்கின்றான். போனில் அந்த சிறுமியின் பெற்றோரிடம் 20 லட்சம் பணம் கேட்டுள்ளான். இதற்காக குரலை மாற்றி வேறு பேசி இருக்கிறான். பயந்து போன அந்த சிறுமியின் பெற்றோர் போலீசிடம் சென்றனர்.

Category

🗞
News

Recommended