ராமாயணம் முதல் மகா பெரியவா வரை - வேடல் ஆன்மிக அருங்காட்சியகம்!

  • 4 years ago
சுங்குவார்சத்திரத்திலிருந்து காஞ்சிபுரம் சாலையில் அமைந்துள்ளது வேடல் கிராமம். இங்குதான் ஆதி சங்கரர் கலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆதிசங்கரர் வாழ்க்கை முதலியவற்றைச் சித்தரிக்கும் பொம்மைகளின் கண்காட்சி அமைந்துள்ளது. முப்பரிமாணத்தில் அசையும் பொம்மைகளாக மின்சாரத்தால் இயங்கும் வண்ணம் இவை அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் கண்டு மகிழவேண்டிய இந்த அருங்காட்சியகத்தில் மகா பெரியவா பயன்படுத்தி பொருள்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கோசாலை, வேத பாடசாலை, 65 அடி சந்திரமௌலீஸ்வரர் என்று காண்பதற்கு சிலிர்ப்பூட்டும் ஆன்மிக பூமியாகத் திகழ்கிறது இந்த வளாகம்

- சைலபதி, சி.வெற்றிவேல்,
குரல் : கதிரேசன்,
பாடியவர் : சோலார் சாய்,
வீடியோ : சே.பாலாஜி.