Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/28/2019
ஒரு பெண்... ஒரு பிரபலத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா? பொய்யானதா? என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. நடுவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக சிலரும், குற்றம்சாட்டப்பட்ட பிரபலத்தின் சார்பாக சிலரும் நின்று கொண்டு அந்தக் குற்றத்திற்காக வாதிட்டுக் கொள்கிறார்கள். எனில் அந்த வாதம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே! அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே?

Category

🗞
News

Recommended