Skip to playerSkip to main content
  • 6 years ago
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசி வருவதால் பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் நிலவியது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபகுதிகளான திருக்கனூர, மதகடிப்பட்டு, மடுகரை, திருபுவனை, வில்லியனூர், நெல்லிதோப்பு, முத்தியால்பேட்டை, எல்லைபிள்ளை சாவடி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளர்ச்சியான சூழல் நிலவியது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.

des : The public and the farmers are happy because of the widespread rains in the rural areas

Category

🗞
News

Recommended