திரௌபதியம்மன் என்பவர் குலதெய்வமாக வணங்கப்படும் நாட்டார் பெண் தெய்வமாவார். மக்கள் மகாபாரத கதையில் வருகின்ற பாஞ்சாலி என்ற கதாப்பாத்திரத்தினை தெய்வமாக வழிபடுகின்றனர். இவரை பார்வதி தேவியின் வடிவமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர்கள் இவரை வழிபடுகின்றனர்.
திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைபாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. விழாக்காலங்களில் தீமித்திதல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.
Be the first to comment