Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
முத்தரையர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவரும் திரைப்பட நடிகருமான பரதன் பேசியபோது, முத்தரையர் வன்முறையை கையிலெடுக்க வேண்டாம் என்றும், முக்குலத்தாரோடு நட்பு ரீதியில் பழகுமாறும், தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என கேட்டு கொண்டார். எமது சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் வன்முறையை அனுமதிக்கமாட்டார்கள் என்றும், முக்குலத்தோர் உயர்ந்த நோக்கத்தோடு புகார் மட்டுமே அளித்து உள்ளனர். முத்தரையர் சமுதாயத்தை வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொண்ட அமைப்பை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக முதல்வரை ஒருமையில் பேசியவர்கள் முன்பு காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாகவும், எங்கள் சமுதாயத்தை சேர்ந்த அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி இந்த வன்முறையை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடமும், காவல்துறை தலைவரிடமும் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

des : Meeting with reporters in Trichy on behalf of Muthiriyars Union Alliance

Category

🗞
News

Recommended