Skip to playerSkip to main content
  • 7 years ago
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வெள்ளைக்கல் மேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர் அங்குள்ள வணிக வளாகத்தில் டைலர் கடை நடத்தி வருகின்றார். இவர் வழக்கம் போல் பணிகளை முடித்து வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கடையில் தீப்பிடித்து புகை வெளியே வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சென்ற காட்பாடி தீயணைப்புத்துறையினர், கடையின் ஷட்டரை உடைத்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ பிடித்து எரிந்ததில் கடையில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதனிடையே மின்கசிவு காரணமாக தான் தீ பற்றி எரிந்ததுள்ளதாக தீயணைப்பு துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

des: Fifty thousand rupees worth of fire was found in the fire.

Category

🗞
News

Recommended