வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம்-தேர்தலை புறக்கணிக்கபோவதாக கிராம மக்கள் எச்சரிக்கை-வீடியோ

  • 5 years ago
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே விளைநிலங்களை தரிசாக மாற்றுவதால் தங்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்கபோவதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பனந்தாள் அருகே கூத்தனூர் கிராமத்தில் உக்கடை என்ற இடத்தில் நூற்றுக்கனக்கான ஏக்கர் விலை நிலங்களை தரிசாக மாற்றி சங்கராபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குடியாளம், கூத்தனூர், உக்கடை ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். சங்கராபுரம் அமைக்கப்பட்டுள்ள நத்தம், புறம்போக்கு பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடிசைகளை போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த கூத்தனூர் கிராம நிர்வாக அலுவலர் விவேக் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து வேலைவாய்ப்பு பறிபோவதால், இங்குள்ள நத்தம், புறம்போக்கு பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்ககாவிட்டால், தேர்தலை புறக்கணித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

des :The struggle to insist on housing patta. Villagers warn of the election to be ignored.

Recommended