கரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒன்றே இல்லை என்றும் அதிமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே தான் போட்டி என்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் நங்கவரம் மற்றும் மருதூர் பேரூராட்சி அமமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர், கரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் அதிமுகவும் அமமுகவும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
DES : There is no chance of joining ADMK and AIADMK