Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளரும் புதிய தமிழக கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் கூட்டணிக் கட்சியாக தேமுதிக பிஜேபி பாமக சமத்துவ மக்கள் கட்சி புதிய தமிழகம் தாமாகா போன்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனிடையே உள்கட்சி பூசல் மற்றும் கூட்டணி கட்சியினர் ஈகோ மன வருத்தம், பணி செய்யாமல்இருப்பது போன்ற செயல்கள் தென்காசி கூட்டணி கட்சிகளுடன் நடந்து வருவதால் வேட்பாளரான கிருஷ்ணசாமி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கூட்டணிக் கட்சியினரை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் கட்சி பாகுபாடின்றி மத்தியில் இரண்டாவது முறையாக பிஜேபி ஆட்சிக்கு வரவும் மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடரவும் அனைத்து கட்சியினரும் மனவெறுப்பு ஈகோ போன்ற பிரச்சனைகளை ஓரங்கட்டி அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் அனைத்து கூட்டணி கட்சியினரும் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

DES : ADMK alliance party candidate Krishnasamy urged meeting

Category

🗞
News

Recommended