Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போவதற்கான திட்ட அறிக்கையை வருகின்ற 26ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட உள்ளார் என பாஜக மாநில தலைவர் மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.



தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக குடும்ப அரசியல் நடத்தி வருவதாக வருவதாகவும் அதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என என குறிப்பிட்டார். மக்கள் ஆதரவுடன் வரும் 25-ஆம் தேதி தூத்துக்குடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

ராகுல் பிரதமர் என திமுக அறிவித்ததை கூட திமுக கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். கூடா நட்பு கேடாய் முடியும் என சாதிக் பாட்சாவின் உடைய மனைவி விளம்பரம் செய்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரை திமுகவினர் மிரட்டி வீட்டில் கல் வீசியுள்ளார். இதிலிருந்து திமுகவினர் பெண்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தெரிய வருகிறது என்றார்

Category

🗞
News

Recommended