Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 years ago
தேனி மாவட்டம் போடி தேவர்காலணி அருகே தர்மராஜ்நகர் பகுதியில் உள்ள மதுபானகடைக்கு கேரளா பதிவெண் கொண்ட காரில் சிலர் வந்துள்ளனர். மது அருந்திவிட்டு குடிபோதையில் காரை வேகமாக எடுக்க முயன்ற போது நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து பின்நோக்கி வேகமாக வாகனத்தை இயக்கியுள்ளனர். இதில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்து சாலையின் குறுக்காக விழுந்தது. மதுக்கடையில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது காரில் இருந்த நபர்கள் மதுக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் தர்மராஜ்நகர்,கரட்டுப்பட்டி ரங்கநாதன் நகர், தேவர்காலணி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துன்டித்து மின்கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு அரசுபொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரம் என்பதால் மின்தடை காரணமாக இப்பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

des : The students are suffering from the resistor

Category

🗞
News

Recommended