Skip to playerSkip to main content
  • 7 years ago
மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மேல்சந்தம்பட்டி கிராமத்தை சேர்தவர்கள் சக்கரவர்த்தி மற்றும் சக்தி. இவர்கள் இருவரும் கட்டிட வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்தூரை அடுத்த கவுண்டனூர் கிராமத்தில் கட்டிட பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக பாண்டிச்சேரியிலிருந்து ஓசூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த பாண்டிச்சேரி அரசு பேருந்து, இவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதைஅடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே பேருந்து ஓட்டுனர் நீதிநாதன் மற்றும் நடத்துனர் ஜெயராமன் ஆகிய இருவரும் பேருந்திலிருந்து இறங்கி தப்பியோடினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்தூர் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு உடைக்கபட்ட பேருந்தையும் மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

des : Pondicherry Government bus collided with the death of two people and returned home

Category

🗞
News

Recommended