ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. அதை விட முக்கியமாக பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியான பாலகோட் என்ற பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார்.