Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/23/2019
The elephants Enters into the village and farmers land.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் கூட்டமாக நுழைந்து அட்டகாசம் செய்துவருகின்றது



நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களில் வன உயிரியான யானைகள் தங்கள் குட்டிகளுடன் வந்து பயிர்களையும் , கரும்பு போன்ற அனைத்து பயிர் வகைகளையும் அழித்து நாசம் செய்து வருகிறது. தற்போது மலைப்பகுதிகளில் இருந்து கடந்த மூன்று மாத காலமாக யானைகள் கூட்டம் கூட்டமாக இறங்கி வந்து மலை அடிவாரங்களில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நாசம் செய்து வருகிறது. தற்போது நாசம் செய்துள்ள நெல் பயிர்களின் பதிப்பு பல ஆயிரம் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் எங்களுக்கு வாழ்வாதாரமாக இந்த விவசாயத் தொழிலையே செய்து வருகின்றோம் பல ஆண்டுகளாக பாபநாசம் அனவன்குடியிருப்பு பகுதியில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றோம் .ஒரு ஏக்கர் நெல் பயிரிட சுமார் 30ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் செலவிட்டு வருகின்றோம்.நெல் பயிர்கள் இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கூட்டமாக வருகின்ற யானைகள் எங்களது விளைநிலங்களை சீரழித்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசும் வனத்துறையும் ஒன்றிணைந்து சோலார் பேனல் மூலம் விளை நிலங்களை சுற்றி மின் வேலி மற்றும் அகழிகள் அமைத்து தர வேண்டும் மேலும் தற்போது இறங்கி கொண்டிருக்கும் யானைகளை காட்டுக்குள் விரட்டி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Category

🗞
News

Recommended