உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், முருகன் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல கேரள பக்தரிடம், விரைவில் சாமி தரிசனம் செய்ய 4 பேருக்கு தலா 11000 ரூபாய் பணம் கேட்டதால், அவர் ஆந்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நாள்தோறும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.
Be the first to comment