மதுரையில் வரும் 27 -ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பா.ஜ.க கட்சி நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி அருகே உள்ள மண்டேலே நகர் பகுதியில் நடைபெறுகிறது.நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தமிழக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஹெச் ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போதுகட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் மேலும் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதற்காகவும் வரும் 27ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார்.பிரதமர் மோடி வருகை தமிழகத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும்.தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பதிலாக அமையும் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும் திருப்புமுனையும் இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்தும்.என்றார்