உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை முன்னிட்டு நேற்று மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக ஜல்லிக்கட்டு போட்டியை தனி ஆணையர் முன்னிலையில் நடத்த உத்தரவிட்டது.வாடிவாசல் அமைய உள்ள பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் மதுரை மண்டலம் 4 உதவி ஆணையர் பிரேம்குமார் ,சுகாதார ஆய்வாளர் ஜான் பீட்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் ஊழியர்கள் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்காக தடுப்பு வேலி அமைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நவீன இயந்திரங்களுடன் வேலை செய்து தடுப்பு வேலி அமைத்து வருகின்றனர்.ஐல்லிக்கட்டு நடைபெற இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாடிவாசல் தடுப்பு வேலியை வேகமாக அமைத்து வருகின்றனர்.இதனால் கடந்த 10 நாட்கள் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று பரப்பாக இருந்த அவனியாபுரம் தற்போது உயர்நீதி மன்ற உத்திரவினை தொடர்ந்து ஜல்லிக்கட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.