வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த முசிறியில் ஹாட்சன் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் அதே பகுதியை சேர்ந்த 58 பேர் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.கடந்த ஆங்கில வருடப்பிறப்பன்று அரசு விடுமுறை என்பதால் அனைவரும் விடுப்பு எடுத்துள்ளனர்.ஆனால் முறையாக தெரிவிக்காமல் விடுப்பு எடுத்ததாக கூறி 58 பேரையும் தொழிற்சாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.ஒப்பந்த ஊழியர்கள் பல போராட்டங்கள் மேற்கொண்டும் நிர்வாகம் செவிசாய்க்காததால் இந்து முண்ணனி இயக்கத்தின் சார்பில் அந்த தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சார் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகார் மனுவினை சார் ஆட்சியர் இளம் பகவத் அவர்களை நேரில் சந்தித்து ஒப்பந்த ஊழியர்கள் வழங்கினர்.