ஆஃப் ரோடு ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மஹிந்திரா அட்வென்ச்சர் என்ற தனி பிரிவை மஹிந்திரா தொடங்கியுள்ளது. இதன்மூலம் ஆஃப் ரோடு சாகச பிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் நாட்டின் 2வது மஹிந்திரா அட்வென்ச்சர் ஆஃப் ரோடு பயிற்சி மையம், கர்நாடக மாநிலம் மங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது. 150 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இம்மையத்தில், 5.5 கிமீ நீளமுடைய ஆஃப் ரோடு தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மஹிந்திரா எஸ்யூவி கார்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.
Be the first to comment