Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
300 ஆண்டு பழமை வாய்ந்த புளிய மரம் 150 ஆண்டு பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் மீது வேரோடு சாய்ந்து கோவில் சேதமடைந்தது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் உள்ளது ஆண்டுதோறும் வைகாசி 15ஆம் தேதி சிரசு திருவிழா நடப்பது வழக்கம் இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த புகழ்பெற்ற கோவில் அருகே சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரம் உள்ளது இன்று அதிகாலை வேரோடு புளியமரம் கோவில் மேல் சாய்ந்ததில் கோவில் மற்றும் கோவிலுக்குள் நிறுத்தியிருந்த தேர், உற்சவரை கொண்டு செல்லும் வாகனம் அனைத்தும் சேதம் அடைந்தது.இதனால் அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Des: The 300-year-old pulley tree was damaged by a 150-year-old Ganjayamman temple

Category

🗞
News

Recommended