நடிகர் ரஜினிகாந்த் குழப்புகிறார், தெளிவில்லை என்று நிறைய பேசி வருகிறார்கள் பலர். உண்மையில் ரஜினி தெளிவாகத்தான் இருக்கிறார். பார்க்கும் நாம்தான் குழம்பிப் போயிருக்கிறோம். கருணாநிதி, ஜெயலலிதா என்ற அரசியல் பிம்பங்கள் இருக்கும்போதும், இப்போதும் ரஜினிக்கு என்று ஒரு பிம்பம் இருப்பது உண்மை. அதை ரஜினியும் நன்றாகவே அறிந்துள்ளார். இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்ற சுதந்திர உரிமையின்படி ரஜினியும் கட்சி தொடங்கலாம். ஆனால், கட்சி என்பது தனி நபர் சார்ந்தது கிடையாது.