பி.எம்.டபுள்யூ காரில் வேகமாக சென்று மோதிய டிவி நடிகர்- வீடியோ

  • 6 years ago
மும்பையில் தனது பி.எம்.டபுள்யூ. காரை மூன்று கார்கள் மீது மோதியுள்ளார் நடிகர் சித்தார்த் சுக்லா.

இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் சித்தார்த் சுக்லா(37). மும்பை ஓஷிவாரா பகுதியில் அவர் தனது பி.எம்.டபுள்யூ. காரில் அதிகவேகமாக சென்றுள்ளார்.

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

சாலையில் தாறுமாறாக ஓடிய சித்தார்த்தின் கார் மூன்று கார்கள் மீது மோதி பின் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் சித்தார்த்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் மோதிய கார்களில் இருந்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended