கத்தியால் தாக்கிய கொள்ளையன் மடக்கி பிடித்த மக்கள்-வீடியோ

  • 6 years ago
போரூர் அடுத்த மதனந்தபுரம், முத்துமாரி அம்மன் நகரை சேர்ந்தவர் நிர்மலா. இவரது வீட்டின் மேல் மாடியில் வீடு காலியாக இருந்துள்ளது. வீட்டை வாடகைக்கு கேட்பது போலும் கணவன், மனைவி போல் இரண்டு பேர் வந்தனர். வீட்டை சுற்றி பார்த்தவர்கள் கீழ் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இதையடுத்து நிர்மலா சமையல் அறையில் தண்ணீர் கொண்டு வர சென்றார். அப்போது பின் தொடர்ந்து கையில் கத்தியுடன் சென்ற அந்த மர்ம நபர் நிர்மலாவை கீழே தள்ளி அவர் அணிந்திருந்த நகையை கேட்டார். மேலும் அவர் நகை தர மறுத்ததால் காதில் இருந்த கம்மலை அறுத்துள்ளார். பின்னர் கழுத்தில் இருந்த செயினை பறித்துள்ளார். ஆனாலும் அந்த கொள்ளையனிடம் நிர்மலா போராடி உள்ளார். இதில் இருவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது . நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த தமீம் அன்சாரி என்ற வாலிபர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது நிர்மலா மீது கத்தியால் குத்துவது போல் அந்த இருப்பதைப்பார்த்து விட்டு வீட்டின் முன்பு ஓடி வந்தார். உடனே வெளியே வந்த கொள்ளையனை மடக்கி பிடித்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உடன் வந்த பெண் லாவகமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் தட்சணாமூர்த்தி என்பது தெரியவந்தது. மேலும் இந்த நபர் இதுபோல் வேறு எங்காவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோனத்தில் விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய அந்த பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையடுத்து அந்த நபரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காயம் அடைந்த நிர்மலா போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் அப்பகுதிகளில் சரிவர ரோந்து பனியில் ஈடுபடுவது இல்லை என்பதால் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று வருகிறது. குற்றசம்பவங்களை தடுக்க போலீசார் தொடர் ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended