அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

  • 6 years ago
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நீட் தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது,

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையினையும், உயிர் பலியையும் வாங்கிய நீட் தேர்வில், வரும் கல்வி ஆண்டு முதல் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அண்மையில்தான், நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் பொறுப்பு, CBSE-யிடமிருந்து NTA எனும் தேசிய தேர்வுகள் முகமைக்கு வழங்கப்பட்டது. NTA எனும் தேசிய தேர்வுகள் முகமை, ஆண்டுக்கு 2 நீட் தேர்வுகள் நடத்ததிட்டமிட்டுள்ளது. NTA எனும் தேசிய தேர்வுகள் முகமையின் திட்டப்படி, இந்த கல்வி ஆண்டு முதல் டிசம்பரில் முதல் நீட் தேர்வும், மே மாதத்தில் 2-ம் நீட் தேர்வும் நடத்தப்படவிருக்கின்றன. நீட் தேர்வு மட்டுமில்லாமல், IIT, JEE உள்ளிட்ட பல்வேறு உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளையும் இரண்டு முறை நடத்த NTA திட்டமிட்டுள்ளது.

வரும் ஆண்டில் இருந்து அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு பாடத்திட்டத்திலும் நீட் தேர்வு கேள்விகள் கேட்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended