மித மிஞ்சிய போதை... பொதுமக்கள் தாக்கு....வீடியோ

  • 6 years ago
குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆவடி திருமுல்லைவாயில் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது சாலையில் முன் சென்ற ஆட்டோ ஒன்றை அந்த கார் முந்திச்செல்ல முயன்ற போது ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்து மூவர் படுகாம் அடைந்தனர். ஆட்டோ மீது மோதிய கார் நிற்காமல் சாலையின் தடுப்பு சுவற்றில் ஏறி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி ஒருவழியாக நின்றது.நின்ற காரை மீண்டும் இயக்குவதற்கு ஓட்டுனர் முயற்சித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் காரை முற்றுகையிட்டதுடன் காரின் உள் பார்த்த போது மூன்று பேர் இருந்துள்ளனர். அனைவரும் தலைக்கேறிய போதையில் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். அவர்களை பிடித்த பொதுமக்கள் சராமாரியாக அடித்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,. உடனே போலீசார் விரைந்து வந்து காரை ஓட்டி வந்தவரையும் அவருடன் வந்தவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended