பனியன் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தேன்மொழி ஈரோட்டில் உள்ள பிண்ணலாடை ஒன்றில் ஹல்பராக பணியாற்றி வந்துள்ளார். பெண்கள் விடுதியில் தங்கியுள்ள தேன்மொழி துணி துவைத்து விட்டு அங்கிருந்த இரும்பு தூணை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த தேன்மொழி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவரது பிரதே பரிசோதனை கோவையில் நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்த்தையடுத்து தேன்மொழியின் உடல் கோவைக்கு எடுத்து செல்லப்பட்டது.
des : The police have registered a case against the woman's death at the Bhanani police station