தூத்துக்குடி சம்பவத்தில் தமிழக காவல்துறை ஸ்டெர்லைட் ஆலையின் கூலிப்படையாக செயல்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தூத்துக்குடியில் தமிழக காவல் துறை ஆலை நிர்வாகத்தின் கூலிப்படையாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்
துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்ட நிலையிலும் முதல்வர் உட்பட அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது . 5 நாட்களாகியும் பிரதமர் அனுதாபமோ , ஆறுதலோ தெரிவிக்கவில்லை , இதிலிருந்தே மோடி அரசும் , எடப்பாடி அரசும் சேர்ந்து செய்த சதித்திட்டம் எனதெரிகிறது என்றார்