இன்றைக்கு ஒன்றும் அவ்வளவு முக்கியமான நாள் இல்லை என குமாரசாமி கூலாக தெரிவித்துள்ளார். நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் கர்நாடக அரசியல் களத்தை நாடே உற்றுநோக்கி வருகிறது. அவசர அவசரமாக பாஜக பதவியேற்ற நிலையில், யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு கர்நாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. கர்நாடாகாவில் பாஜக ஆட்சி கவிழுமா அல்லது நீடிக்குமா என்பது இன்று மாலை 4 மணிக்கு மேல் தெரிந்து விடும். எந்த எம்எல்ஏவும் எந்த பக்கமும் செல்லவில்லை. எங்கள் எம்எல்ஏக்கள் யாரும் சிக்கவில்லை. நானும் சித்தராமையாவும் ஒன்றாக செல்வோம். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.
HD Kamaswamy has said For me, today is not an important day, the important days will come in future. Up to 4 pm, BJP will try to poach our MLAs he said further.