ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன்...மாணவனின் ஆவேசக் கடிதம்!- வீடியோ

  • 6 years ago
இறந்த பின்பும் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என்று 12-ம் வகுப்பு மாணவன் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரின் இதயத்தையும் உலுக்கி போட்டுள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானதுடன், தினமும் வீட்டில் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவரது மகன் தினேஷ் நல்லசிவனையும் படிக்க விடாமல் நாள்தோறும் தொல்லை கொடுத்து வந்துள்ளார், மனமுடைந்த தினேஷ், வண்ணார்பேட்டை தெற்கு புறவழி சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விரைந்து வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த தினேஷின் பையை சோதனையிட்டனர். அதில் நீட் தேர்வு எழுதுவதற்கான அடையாள அட்டை, அனுமதி சீட்டு மற்றும் ஒரு உருக்கமான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டது. அந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது தன் தந்தை குடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தனது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் தனது இறப்பிற்கு பிறாகாவது பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கவேண்டும் என்றும், இல்லையென்றால், தான் ஆவியாக வந்து மதுபானக்கடைகளை உடைத்து அழிப்பேன் என்றும் தினேஷ் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Recommended