நெல்லை அருகே சிறுமியை கடத்த முயன்றவருக்கு தர்ம அடி- வீடியோ

  • 6 years ago
நெல்லை மேலப்பாளையத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். ஆனால் இதுகுறித்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை அருகே உள்ள மேலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் ஓட்டுநராக உள்ளார். இவர் தனது 7 வயது மகள் மற்றும் குடும்பத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்ததார். அதிகாலை அவரது வீட்டிற்குள் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியின் வாயை பொத்தி வெளியே தூக்கி சென்றார்.

Recommended