பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிர்மலா தேவியின் பின்புலத்தில் இருப்பவர்கள் அனைவரையும் களையெடுக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் சார்பில் போராட்டக் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றிருந்த போது உயர் அதிகாரிகள் மூலம் மாணவிகளுக்கு 'ஆப்பர்டுனிட்டி' கிடைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் இதிர் தொடர்புடைய கறுப்பு ஆடுகள் அனைத்தும் களையெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Madurai Kamarajar University various professor organisations formed a protest committee against Niramaladevi to find out the oddmans in connected with her.